கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான விவகாரம் - லோகோ பைலட் சஸ்பெண்ட்

 
Train issue

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் விசாரணையில் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்ததால் ரயிலை ஒட்டிய லோகோ பைலட் பவித்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த மாதம் 24ம் தேதி, சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயில் மாலை 4.25 மணியளவில்  தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு முதலாவது நடைமேடையில் ஏறி அங்குள்ள கட்டுமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது.  விபத்துக்குள்ளான இரயிலானது சுமார் 9 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.  இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயிலை இயக்கிய லோக்கோ பைடல் பவித்திரன் பிரேக் பழுது காரணமாக ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

Train issue

சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில், 5 பேர்கள் கொண்ட குழு அமைப்க்கப்பட்டது. இதில், மெக்கானிக்கல்,  சிக்னல்,  ஆப்பரேட்டிங் மற்றும் எலக்ட்ரிகல் துறை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த விசாரணை குழு, ரயில் ஓட்டுநர் பவித்ரனிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை சென்னை கோட்ட ரயில்வே மேலாளரிடம் ஒப்படைத்தது.  விசாரணை குழுவின் அறிக்கையில் பிரேக் பழுது ஏற்படவில்லை எனவும் லோகோ பைலட்டின் கவனக்குறைவே காரணம் எனவும் தெரியவந்தது. அதன்படி லோகோ பைலட் பவித்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\