டிச.5ல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாற வாய்ப்பு..

 
டிச.5ல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாற வாய்ப்பு.. 

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு  மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல காற்றழுத்தாக பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாக்க பகுதி டிசம்பர் 8,  9 ஆகிய தேதிகளில் புயலாக மாறக்கூடும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும்,  நாளையும் தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால்   பகுதிகளில் மிதமான மழைபெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது .

மழை

 டிசம்பர் 2, 3-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  வானிலை மையம் கூறியிருக்கிறது.  டிசம்பர் 4-ல் வட தமிழகம், தென் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது.