புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள்??.. மனைவி கிருத்திகாவிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கும் சிறை அதிகாரி...

 
பப்ஜி மதன்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காட்சியும் அதற்கு சிறப்பு சலுகைகள் செய்து தரக்கோரி அவரது மனைவி கிருத்திகாவும் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்று ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் சேனல்களில்  தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு  குறித்த விடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றி பிரலமானவர் பப்ஜி மதன்.  சுமார் 8 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த  பப்ஜி மதன்,  இந்த யூடியூப் மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து ஆடி கார், பங்களா வீடு  சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.   யூடியூபில் லைவ்  வீடியோக்களின் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவது, அவதூறான வார்த்தைகளில் பேசுவதை  வாடிக்கையாக  கொண்டிருந்த பப்ஜி மதன் மீது வடபழனியைச் சோ்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில்   புகார் அளித்தார்.  

பப்ஜி மதன்

இதனையடுத்து  ஆபாசமாக பேசியது , பண மோசடியில் ஈடுபட்டது என அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.  159 க்கும் மேற்பட்ட புகார்கள் பப்ஜி மதனுக்கு எதிராக குவிந்ததை அடுத்து , 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பப்ஜி மதனை  காவல் துறையினர் தேடி  வந்தனர். இதனையடுத்து ஜூலை மாதம் 6 அம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில்  உள்ள பப்ஜி மதனுக்கு   சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை அதிகாரிகளிடம் அவரது மனைவி கிருத்திகா லஞ்சம் கொடுப்பது குறித்து பேசியிருக்கிறார்.

பப்ஜி மதன்  - மனைவி கிருத்திகா

 புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு  சொகுசு வசதிகள் செய்து தருவதாகக் கூறி, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டு பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்கும்  சிறைத்துறை அதிகாரியிடம் பணத்தை  தயார் செய்து கொண்டிருப்பதாக கிருத்திகா கூறுகிறார்.  அதற்கு  சிறைத்துறை அதிகாரியும் சரி.. பரவாயில்லை.., மதன் நன்றாக இருக்கிறார்..  என்று கூறுகிறார்.  மேலும் கிருத்திகா சிறைத்துறை அதிகாரிக்கு ரூ. 25 ஆயிரம் கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில்   லட்சம் கேட்கும் ஆடியோ விவகாரம் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.