ரூ.221 கோடி செலவில் திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2022) அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  விழாவில், 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


இந்த விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ. ராசா, திரு. தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கே. சின்னப்பா, திரு.க.சொ.க. கண்ணன், திரு. எம். பிரபாகரன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.