"புத்தாக்க சிந்தனையை வளர்க்க" பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்!!

 
stalin stalin

மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை வளர்க்க பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனை உருவாக்கிட  "பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்" எனும் புதிய திட்டததை முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

mk stalin

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும் கல்வித்துறையும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும். 3120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.

mk Stalin biopic

மேலும், மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் வகையான மாணவர் குழுக்களின் சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ. டைம் வரை ரொக்கப் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இதன் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுத்தப்படுவதோடு, அவர்களை வருங்கால் தொழில்முனைவோர்களாக உருவாக்க முடியும்.