முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணம் - வெளியானது முக்கிய அறிவிப்பு!!

 
mk Stalin biopic

தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் நெடுகையில் ரூ. 14.50 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

tn

அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடை மற்றும் கல்லார் கிராமம், கல்லார் வடிகாலில் ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளையும், மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில், உருளும் விதைப்பு கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு செய்யும் பணியினையும்  பார்வையிட்டார்.

tn

அதன் பின்னர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் கிராமம், பேரளம் வாய்க்காலில் 4 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட முதல்வர், ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளின் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தார். அத்துடன் 4964.11 கிலோமீட்டருக்கு 683 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  கடைமடை வரை காவிரி நீர் பாயும்! மகசூல் பெருகி உழவர்கள் நெஞ்சம் நிறையும் என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டு இருந்தார்.  இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக நாளை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு செல்கிறார். சமத்துவ புரத்தை திறந்துவைத்து, பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்யவுள்ளார்.