முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் உதயநிதி ஆய்வு!!

 
tn

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில்  முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  ஆய்வு மேற்கொண்டார். 

tn

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  வருகை தந்துள்ளார்.

ttn

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்  முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று  காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானம், வீராங்கனைகள் தங்கும் விடுதி, நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.