டென்மார்க் சர்வதேச நீச்சல் போட்டி - நடிகர் மாதவன் மகன் சாதனை!!

 
tn

டென்மார்க் சர்வதேச நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் நடைபெற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த் கலந்து கொண்டார்.  நேற்று முன்தினம்  நடைபெற்ற 1500 மீட்டர் பிரிவுக்கான போட்டியில் வேதாந்த்  வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் , நேற்று நடைபெற்ற 800 மீட்டர் பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

tn

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் போட்டியில் 7 பதக்கங்களை பெற்று மாதவன் மகன் வேதாந்த்  பெருமை சேர்த்த நிலையில் 2026இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். 



இதுகுறித்து நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  உங்களுடைய ஆசிர்வாதத்தால் தொடர்ந்து வெற்றிகள் கிடைத்து வருகிறது . இன்று 800 மீட்டர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது.  இதற்காக பயிற்சியாளர் பிரதீப் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் மாதவன் மகன் வேதாந்த்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.