"மதுவை கண்ணாடி பாட்டில்களில் அடைக்க தடை விதிக்க முடியாது" - ஹைகோர்ட் கறார்!

 
மது விற்பனை

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி, அருந்துவோர், பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசிச் சென்று விடுகின்றனர். கண்ணாடி பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். 

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்...!'' - தி.மு.க, ``உங்கள் மது ஆலைகளை  மூடுங்கள்...!'' - அ.தி.மு.க | The clash between ADMK and DMK in Tasmac issue

வயல் வெளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் காயமடைகின்றனர். புதுச்சேரியில் பாக்கெட்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்.7 முதல் நேரடி விசாரணை..! | Direct hearing  in Chennai High Court from Sep 7 | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட முடியாது. கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரிக்கை வைக்கப்படவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதால் கோரிக்கையை ஏற்க முடியாது என்றனர்.