தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உத்தரவு

 
madurai high court

தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவ்விட்டுள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை உலக தமிழ் சங்க கட்டிடத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் கூடிய பிறமொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். 

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தேவையான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.