12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது மதுரை - தேனி ரயில் சேவை..

 
12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது மதுரை - தேனி ரயில் சேவை..

12 வருடங்களுக்குப் பிறகு மதுரை - தேனி  இடையே ரயில் சேவை இன்று இயக்கப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் ரயிலை உற்சாகமாக வரவேற்றனர்.  

1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்  போடி-மதுரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி என அப்பகுதிகளை உள்ளடக்கிய இந்த ரயில் சேவை,  அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது.  கடந்த 2010ம் ஆண்டு  அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக மதுரை- போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளால்,   கடந்த 12 ஆண்டுகளாக மதுரை- போடி ரயில் சேவை இயக்கப்படவில்லை.  

12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது மதுரை - தேனி ரயில் சேவை..

மதுரை- போடி ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மதுரை- தேனி வரையில்   அகல ரயில் பாதை பணிகள் முழுமையடைந்துவிட்டது. இதனால் முதல் கட்டமாக மதுரை- தேனி இடையே ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து மதுரை தொகுதி மக்களவை  உறுப்பினர் சு.வெங்கடேசன்,  இன்று முதல் ( 27 ஆம் தேதி முதல்) மதுரை - தேனி  இயங்கத் தொடங்கும் எனவும்,  12 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்றோடு தேனிக்கு வந்து சேர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  

12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது மதுரை - தேனி ரயில் சேவை..

இதனையடுத்து நேற்று ( மே 26 ) சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி மதுரை - தேனி ரயில் சேவையை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.  அதன்படி இன்று 12 ஆண்டுகளுக்கூப் பிறகு மதுரை - தேனி இடையே ரயில் இயக்கப்பட்டது. வழிநெடுகிலும் பயணிகள் உற்சாகமாக வரவேற்றனர். மதுரை போடிநாயக்கனூர் இடௌயே 90.4 கி.மீ தூரமுடைய அகல ரயில் பாதை வழித்தடத்தில்  , தற்போது 75. கிலோமீட்டர் அதாவது  தேனி வரை மட்டுமே பணிகள் நிறைவடைந்திருக்கிறது.  விரைவில் போடி வரையிலான மீதமுள்ள 15 கி.மீ தூரமுள்ள   அகல ரயில் பாதை பணிகளும் நிறைவுபெறும் பட்சத்தில்  போடிநாயக்கனூர் - சென்னை வரையிலான ரயில் சேவை தொடங்கும் என  தேனி மாவட்ட மக்களவை உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.