கொடநாடு வழக்கில் மூளையாக செயல்பட்டவர்.. 516 தகவல் பரிமாற்றம் -316பேரிடம் மறு விசாரணை

 
ko

 கொடநாடு வழக்கில் மூளையாக செயல்பட்டவருக்கு  16 செல்போன்கள், 6 சிம்கார்டுகள் என்றும், குறிப்பிட்ட அந்த தினத்தில் 516 தகவல் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரியவந்திருக்கிறது.  இவ்வழக்கில்  316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  இதனால்  கொடநாடு வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  நேற்று நடந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சயான்,  வாளையார் மனோஜ்,  ஜித்தின் ஜாய் , ஜம்சிர் அலி ஆகியோர் ஆஜரானார்கள் . 

kk

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் , கனகராஜ் ஆஜரானார்கள்.   வழக்கு வாதத்தின் போது,  அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரைக்கும் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.   இந்த வழக்கின் மூளையாக செயல்பட்டு சாலை விபத்தில் மர்மமான முறையில்  உயிரிழந்தவர் கனகராஜ்.

 அவரின் பெயரில் இருந்த 6 சிம்கார்டுகள் உட்பட 16 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.   சம்பவம் நடந்தபோது நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டதில் 516 தகவல் பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   அந்த தகவல் பரிமாற்றங்களின் உண்மையை தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. 

இது குறித்த தகவல்  நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.   இதை ஏற்ற கொண்ட நீதிபதி முருகன் வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.