"மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை' : அமைச்சர் கே.என்.நேரு தகவல்!!

 
ttn

மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்துள்ளார். 

nehru

சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் மழை பெய்து வருகிறது. இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்வோர் சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . அத்துடன் வடகிழக்கு பருவமழை வருகிற 20ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்,  முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

ttn

இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னையில் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது; மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது . 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது "என்றார்.