கோவை, மதுரையில் மெட்ரோ; ரூ.1,000 கோடியில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம்!!

 
tn

0ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 நிதியுதவி  அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை  4வது நாளாக தொடங்கி பட்ஜெட் மீதான விவாதங்கள்   நடைபெற்று வருகிறது. பட்ஜெட்  கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில்  பட்ஜெட் விவாதம் மீது நிதியமைச்சரும்,  வேளாண் அமைச்சரும் இன்று பதிலுரை வழங்குகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , "தமிழகத்தில் வருமானப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடன் மளமளவென உயர்ந்துவிட்டது; அதிமுக ஆட்சியில் கடன் அளவு அதிகரித்துவிட்டது. நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இருளர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் ஆயிரம் வீடுகள் கட்ட ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் . ஏழைகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்ற புகாருக்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளிக்கும் உரையில் இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ptr

அத்துடன் சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், "நாம் ஏழை மாநிலம் இல்லை; வளர்ந்த மாநிலம். நிறைய முதலீடு, வளர்ச்சி தேவைப்படுகின்றது . பீகார் , உத்திரப் பிரதேசத்தில் ஒப்பிட்டு பார்த்து சிறப்பாக இருக்கிறோம்  என்பது போதாது .தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். தமிழ் நாட்டின் பொருளாதார ஆலோசனைக்கான  சிறப்பு நிபுணர்கள் குழுவினர், ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார்கள் .முதலமைச்சர் மீது மரியாதை வைத்தும் ,நாட்டுக்காகவும் பணியாற்றுகிறார்கள் " என்றார்.

tn

பேரவையில் நிதியமைச்சர் பேசிய முக்கிய தகவல்கள்:- 

#கோவை மெட்ரோ ரயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிவாகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெறுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

#காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் ரூபாய் 1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

#அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித்தொகை

#மதுரை மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம் 

#சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது