காவிரி ஆற்றில் நிரந்தரமாக சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு

 
nehru

காவிரி ஆற்றில் சாக்கடை நிரந்தரமாக கலக்காமல் இருக்க கழிவுநீர் மறுசுழற்சி திட்டத்தின் வாயிலாக பணிகளை தொடங்க உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார் உள்ளோம் 

திருச்சி வயலூர் சாலையில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே நீர்வளத் துறையின் சார்பில் ஆற்று பாதுகாப்புக் கோட்டம் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள்,ஏரிகள், கால்வாயை தூர்வாருதல் என ரூபாய் 18.75 கோடி மதிப்பில் 90 பணிகளை  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் 80 கோடி மதிப்பிட்டில் 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 10.06.2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும் - கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதி செய்யப்படும். 

kn nerhu

காவிரி பாலத்தை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள பழைய பாலத்தை புனரமைத்து வலுப்படுத்த உள்ளோம் - மேலும் புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். காவிரி ஆற்றில் சாக்கடை நிரந்தரமாக கலக்காமல் இருக்க கழிவுநீர் மறுசுழற்சி திட்டத்தின் வாயிலாக பணிகளை துவக்க உள்ளோம் - அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றார். அரசியல் சார்ந்த கேள்விகளை நிருபர்கள் கேட்ட நிலையில், தூர்வாறுதல் குறித்த கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.