75வது கேன்ஸ் திரைப்பட விழா - பிரான்ஸ் சென்றடைந்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

 
L.Murugan france L.Murugan france

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்  பிரான்ஸ் 
சென்றடைந்தார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக  மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் & கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன். பிரான்ஸ் சென்றடைந்தார்.அமைச்சர் முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பிரான்ஸ் சென்றடைந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் முருகன்," பிரான்சில் உள்ள இந்திய தூதர் @JawedAshraf5 சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-பிரான்ஸ் உறவுகள் மற்றும் @Festival_Cannes 2022 உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து  உரையாடினோம்," என்று குறிப்பிட்டுள்ளார். திரைப்பட விழாவில் 22-ந் தேதி முதல், 24-ந் தேதி வரை அவர் கலந்து கொள்கிறார். விழா முடிந்த பின்னர் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் 25-ந் தேதி காலையில் புதுதில்லி வந்து சேர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.