ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

 
masu

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா கால நெருக்கடியை சமாளிப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக 2300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணிகாலம் கடந்த 31-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், கொரோனா கால ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த செவிலியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:   பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஒப்பந்த செவிலியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்றார் போல பணியை வழங்கும். இவ்வாறு கூறினார்.