தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், தமிழக-கேரள எல்லைகளான 13 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மருத்துவ சேவையை தொழிலாளா்கள் பெறலாம்.
மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் என 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம்  மருத்துவா், செவிலியா் உள்பட 200 வகை பணிகளுக்கு நோ்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை முடித்து, வரும் செப்டம்பா் இறுதிக்குள் பட்டியலை கொடுத்துவிடுவார்கள். செப்டம்பா் இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும்.

ma subramanian


தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கருமுட்டை விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினா் உயா்நீதிமன்றத்தில் தடை பெற்றனா். அந்த தடையை விலக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தடையை விலக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால், கேரளம் - தமிழக எல்லைகளான 13 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார்.