இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது - மனோ தங்கராஜ்

 
mano

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு  கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என  இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. பாஜகவை பொறுத்தவரையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதா என குழப்பத்தில் உள்ளது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா போட்டி யிட்டால், டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் அங்கு போட்டியிட வேண்டிய தேவை இல்லை என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.  இவ்வாறு கூறினார்.