அதிமுக பாஜகவை கழற்றி விடுகிறதா? பாஜக அதிமுகவை கழற்றி விடுமா? - அமைச்சர் மனோ தங்கராஜ்

 
mano

அதிமுக பாஜகவை கழற்றி விடுகிறதா? பாஜக அதிமுகவை கழற்றி விடுகிறதா? என்பது அவர்கள் கதை. இது குறித்து நாம் பேசவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சிக்கு எதிரான போராட்டத்தின் போது பேசிய சி.வி.சண்முகம்,  தமிழகத்தில் மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா அம்மா தாயே என கெஞ்சுகிறார்கள். 39 எம்.பி களும் பிச்சை எடுகிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள். என கூறினார். இதேபோல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் இன்னும் ஓராண்டில் நெருங்க நிலையில் காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கின்ற ஒரு கட்சி தான் திமுக. எனவே தான் அதை கண்கூடாக பார்த்தது தான் சிவி சண்முகமே கூறியுள்ளார் என கூறினார். 

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி வரப்போவதாக அதிமுக எம்.பி. சிவி சண்முகம் கூறிய கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், மயக்கத்தில் இருக்கக்கூடிய ஆட்கள் ஏதாவது உளறுவதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. இன்றைக்கு அதிமுக பாஜகவை கழற்றி விடுகிறதா? பாஜக அதிமுகவை கழற்றி விடுகிறதா? என்பது அவர்கள் கதை. எங்கள் தலைவர் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து நாம் மேலும் பேசவேண்டிய அவசியம் இல்லை என்றார்.