பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து ஆலோசனை - அமைச்சர் நாசர்

 
Nasar

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, மாநிலத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பால் உற்பத்தி, உற்பத்தி பொருட்களை அதிகரிப்பது, சந்தைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. . இதில், 152 உப பொருட்கள் தயாரிக்கப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என கூறினார். 

Nasar

தொடர்ந்து பேசிய அமைச்சர் நாசர், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், துரித நடவடிக்கையால் நாளொன்றுக்கு, 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும்,  ஆவின் பால் விலையில், 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு, 29 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டுகிறது எனவும் கூறினார். மாநிலத்தில் கூட்டுறவு பால் சங்க உறுப்பினர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பால் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார் எனவும், விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார்.