சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்றும் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல - அமைச்சர் அதிரடி

 
sekar babu

சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல எனவும், நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்டது எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்டது.தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல. சிதம்பரம் நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமானது. திருக்கோவில் வருமானங்கள் குறித்து கேட்கின்றபோது கணக்கு காட்டுவதும் பதில் அளிப்பதும், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. கோவிலின் உள்ளே மானாவரியாக இஷ்டத்திற்கு கட்டிடங்களை கட்டி எழுப்பி இருக்கிறார்கள்.

chidambram koil


 
தவறு எங்கு நடந்தாலும், அதை தட்டிக்கேட்கின்ற, சுட்டிகாட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அரசு சந்திக்க தயார். இவ்வாறு கூறினார்.