பட்டினப் பிரவேசம் தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் - அமைச்சர் சேகர்பாபு

 
sekar babu

தருமபுரம் ஆதின பட்டினப் பிரவேச பல்லாக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், மண்டல அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி வழங்கும் நிகழ்வை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: தருமபுர ஆதினம் பட்டினப் பிரவேசம் பல்லாக்கு தூக்கு நிகழ்வு தொடர்பாக அனைத்து மனமும் குளிரும் வகையில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார். நானே பல்லாக்கு தூக்குவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, யாருக்கும் பல்லாக்கு தூக்க கூடாது, நியாயத்திற்கு மட்டுமே பல்லாக்கு தூக்க வேண்டும் ஜீயர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.எந்த பிரச்னைகளும் வராத வகையில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். 

sekar babu

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை எனவும் வாழ்த்து சொல்வது அவரவர் விருப்பம். மனிதனை மனிதனே சுமக்கும் பல்லாக்கு விவகாரத்தில் முதல்வர் முதலில் தடை செய்துவிட்டு தற்போது பின்வாங்குவது சமூகநீதிக்கு எதிரானதா?  என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்காமல் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.