தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது ஏன் - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

 
sekar babu

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் இருப்பதாகவும், அதனை செயல்படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் கருத்தில் கொண்டுதான் திட்டம் கைவிடப்பட்டதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். 

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டத்தில் 98 வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் தற்போது பெற்றிருக்கிற வாக்கை விட 40% அதிகமாக பெறவேண்டும் என்பதை மனதில் கொண்டு மக்கள்பணி செய்ய வேண்டும்.

sekar babu

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 144 தடை உத்தரவு அங்கு உள்ள வருவாய்த் துறையினரால் போடப்பட்டது.திருக் கோயில் நிர்வாகிகள் மற்றும் இணை ஆணையர் குழு ஊரடங்கு தேவையில்லை என்று கூறியவுடன் ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது. பிரச்சனை ஏற்பட்டால் தகவல் தருவதாக கூறியவுடன் அந்த  ஊரடங்கு நீக்கப்பட்டுவிட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எதிராக திமுக செயல்படுவதாக சீமான் கூறியுள்ளார், என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஏதேதோ பேசுகிறார்கள் என்றார்.

sekar babu

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் இருப்பதாகவும், அதனை செயல்படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் கருத்தில் கொண்டுதான் திட்டம் கைவிடப்பட்டது. மமூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட தகுதி வாய்ந்த மனுக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவது குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.