தொழில்துறையின் தலைநகராக கோவையை உருவாக்குவதே லட்சியம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

 
senthil balaji

தொழில்துறையின் தலைநகராக கோவையை உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் லட்சியம் என முன்சாரத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில்,  கோவை மாவட்ட ஆட்சியார் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உட்பட பல துறைகளை சேர்ந்த தலைமை அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வு கூட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது: கோவை மாவட்டத்தில், அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் கூட, மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, 8,409 கி.மீ.,க்கு மழைநீர் வடிகாலுக்கான கட்டமைப்புகள் உள்ளன. அதில் 5,407 கி.மீ., அளவுக்கு தற்போது வரை துார் வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 65 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளனமுதல்வரின் வருகை மற்றும் அரசு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. வரும், 15ம் தேதி அதிக பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தான் உள்ளது.  . தொழில்துறையின் தலைநகராக கோவையை உருவாக்க வேண்டும் என்பதே முதல்வரின் லட்சியம். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.