பிரதமர் முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil magesh

பிரதமர் முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு எனவும், இது  இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் D.A.V குழுமத்தின் புதிய பள்ளிக்கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆர்ய சமாஜ் கல்விச் சங்கம் மூலம் நிர்வகிக்கப்படும் இப்பள்ளி 3 ஏக்கர் பரப்பில் 5ஆயிரம் மாணவர்கள் பயிலும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

anbil

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: பிரதமர் முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு, இது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபியில் 6 சதவீத ஜிடிபி பங்களிப்பு தரும் தமிழகத்திற்கு குறைவாகவே மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தினார். நிதி நெருக்கடியிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு 36 , 895 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடர்ன் தமிழகத்தின்  தந்தை கருணாநிதி. கொள்கையில் சமரசமின்றி உழைக்கும் முதலமைச்சர் creator of modern tamilnadu -க்கு . அனைத்திற்கும் அடிப்படை பள்ளிக்கல்விதான் , பள்ளியே கோயில் , அதில் பயிலும் மமாணவர்களே தெய்வம் என்று முதல்வர் செயல்பட்டு வருகிறார் . மாணவர்களின்  மதிப்பெண்ணை மட்டுமே வைத்து எடைபோடாமல் , அவர்களது  தனித்திறனை வெளிக்கொண்டுவர அரசு உதவும். அறம் சார்ந்த கல்வி முறையை உருவாக்கி , மாணவர்கள் படித்து முடித்த பிறகு பொருள் ஈட்டவும் உதவும் விதமாக கல்வி இருக்க வேண்டும்.