குஜராத் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

 
Anbil Magesh

குஜராத் கல்வி மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் அழைத்ததாகவும், ஏற்கனவே மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிட்டு நடத்து கொண்டு இருந்ததால் செல்ல முடியவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 277 பேருக்கு ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது;  தமிழக முதல்வர் உத்தரவு படி மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கலெக்டர் தலைமையில் தீர்வு காணவேண்டும் திருச்சி மாவட்டத்தில் மிக வேகமாக பல மனுக்காக்கு தீர்வு காணப்படுவதாகவும் சில மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கபடும்  உதவி தொகையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தாலும் குடும்ப அட்டை பெறுவதாக இருந்தாலும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

anbil

குஜராத் கல்வி மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் அழைத்ததாகவும் ஏற்கனவே மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடு நடத்து கொண்டு இருந்தது மேலும் ஆட்சியில் இல்லாதபோதும் இருக்கும் போதும் கலைஞரின் கொள்கைப்படி மாநிலத்திற்கு என தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் நமக்கு என்ன தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். திட்டமிட்டபடி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை வரும் 13ம் தேதியும் 12ம் வகுப்புக்கு 20ம் தேதியும் 11ம் வகுப்பிற்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் இந்த தேதிகளில் ஊரடங்கு உள்ளட்ட பல்வேறு காரணங்களால் மாற்றம் இருந்தால்  இதுகுறித்து முதல்வரின் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பார்கள் அதன் அடிப்படையில் தெரிவிப்போம்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது  6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறுகிறார்கள் அது மொத்தமாக தான். நாள் ஒன்றுக்கு  பத்தாம் வகுப்பு மாணவர்கள் 40 ஆயிரம் பேர் எழதவில்லை. பிளஸ் 2 மாண வர்கள் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் மாணவர்கள் நாள் ஒன்றுக்கு தேர்வு எழுதவில்லை.  அதை பார்க்க வேண்டிய கடமை கட்டாயம் எங்களுக்கு உள்ளது. ஜூலை மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் தேர்வாக இருந்தாலும் வாருங்கள் உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினார்.