கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
masu

கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரித்து வருவதால், எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
சென்னை தியாகராயநகரில் 25- வது மெகா தடுப்பூசி முகாமினை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  துவக்கி வைத்தார் இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது. தமிழகம் முழுவது 25 வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 12 முதல் 14 வயதுள்ள  21 லட்சம் நபர்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சம் செலுத்திக் கொண்டுள்ளனர்15 முதல் 18 வயதுள்ளவர்களில் 
33 லட்சம் நபர்களில் 28 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 18 வயதிற்கும் மேற்பட்ட 5 கோடி 78 லட்சம் நபர்களில்  5 கோடி 32 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி 5 கோடி 61 லட்சம் நபர்கள் செலுத்தியுள்ளனர்
76 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. சென்னை மாநகராட்சியில்  98% சதவீதம் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

masu

அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அருகில் உள்ள கேரளாவில் 891 நபர்கள் பாதிக்கப்பட்டு 59 நபர்கள் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளதால், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஐஐடி.வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான்கள் இறந்துள்ளதாக வந்துள்ள தகவல் உண்மையில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். கால்நடைகள் மூலம் பரவும் இந்த நோய் பொதுமக்களுக்கு பரவாது தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.