மேகதாது அணை விவகாரத்தில் மாநில உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சார் சேகர் பாபு

 
sekar babu

மேகதாது அணை விவகாரத்தில் மாநில உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும், தேவைப்பட்டால் சட்டப்போராட்டம் நடத்தி அணை கட்டுவதை தடுக்க எல்லாவிதமான முயற்சிகளையும் எடுப்போம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
 
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்தல் மற்றும் காளிகாம்பாள் கோவிலுக்காக செய்யப்படவிருக்கும் வெள்ளித்தேர் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் குன்றக்குடி, பேரூர் ஆதீனங்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது: சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 112 திட்டங்கள் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. 

megathathu

அதில் 80 சதவீதம் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பெரும்பாலான இடங்களில் அடிக்கல் நாட்டு விழா தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் காளிகாம்பாள் திருக்கோவில் வெள்ளி தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 2 வாரத்திற்குள்  தமிழக முதலமைச்சர் பத்திற்கும் மேற்பட்ட பணிகளை துவக்கி வைக்க உள்ளார். உரிய முறையில் சட்டப் போராட்டம் நடத்தி சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி மேற்கொள்வோம். மேகதாது அணை விவகாரத்தில் மாநில உரிமையை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தேவைப்பட்டால் சட்டப் போராட்டம் நடத்தி அணை கட்டுவதை தடுக்க எல்லாவிதமான முயற்சிகளையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எடுப்பார் என கூறினார்.