தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை - அமைச்சார் சேகர்பாபு

 
sekar babu

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும், மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை ஒருபோதும் முதலமைச்சர் புறக்கணிக்க மாட்டார் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை மண்ணடியில் உள்ள தனியார்  பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு ,சென்னையில் மாமன்ற உறுப்பினர்களின்  பரிந்துரைகளை ஏற்று கட்சி வேறுபாடு இன்றி நிதி ஒதுக்கப்படும் என்றார். 

sekar babu

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படதாக பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும், 312 பக்கம் கொண்ட பட்ஜட்டில்  குறிப்பிட்ட திட்டங்களையே அறிவிக்க முடியும் என விளக்கமளித்தார். கட்சி வேறுபாடு பார்க்காமல் மக்களுக்கு பயன் தரும்  திட்டங்களை எப்போதும் புறக்கணிக்காதவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும், அதற்கு உதாரணம் அம்மா உணவகம் என்றார்.தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் காற்றுப்போன பலூன் போல இருப்பதாக அதிமுக கூறுவது தவறு, அதிமுகவே தற்போது காற்று போன பலூன் போலதான் இருக்கிறது, ப்யூஷ் போன பல்பு  போல அதிமுக இருக்கிறது என்றார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்  இந்த வாரத்தில் தாக்கல் செய்யப்படும் மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.