' காசநோய் இல்லா தமிழ்நாடு' - டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் வாகனங்கள்!!

 
TN

காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் மருத்துவ வாகனங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

tn

காசநோய் பாதிப்பை படிப்படியாக குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காச நோய் பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.  அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்தியம் மாநில அரசுகள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

tn

இந்நிலையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் மருத்துவ வாகனங்களை சென்னை, நொச்சிக்குப்பத்தில் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காசநோய் இல்லா தமிழ்நாடு-2025 என்ற இலக்கை எட்ட அரசின் சிறப்பு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காசநோய் கண்டறியும் டிஜிட்டல் ஆம்புலன்ஸ் சேவை ரூ. 10.65 கோடி மதிப்பிலான 23 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இச்சேவை கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று காசநோய் கண்டறிய வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, நொச்சிக்குப்பத்தில் நடைபெற்ற "காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025" என்ற இலக்கை எய்திட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்கள் வழங்கும் தொடக்க விழாவில், சிறப்பாக செயல்பட்டு காசநோய் விகிதத்தை குறைத்ததற்காக நீலகிரி,  திருவண்ணாமலை, கரூர், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் காசநோய் துணை இயக்குநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும்  முதல்வர் வழங்கினார்.