வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...இந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமாம்!!

 
rain

தென் தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

rain

தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை முதல் 11 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

12ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.  கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி , துறைமுகம் ஆகியவற்றில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.