மோடி சென்னை வருகை - பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு தடை!!

 
tn

சென்னைக்கு பிரதமர் மோடி வருகை புரிவதையொட்டி பாஜக  ஏற்பாடு செய்திருந்த பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

tn

பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். ரூ. 36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில்,  பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மோடியின் வருகையை ஒட்டி பாஜக உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளது.

modi

அதன்படி பாஜக கொடியின் நிறமான காவி நிறத்தில் பலூன்களை பறக்க விட தமிழக பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்த நிலையில்,  பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பலூன்களை பறக்க விடுவதாக இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் நிகழ்வில் பங்கேற்கவில்லை.  இந்த சூழலில் பாஜக மாநில பொதுச் செயலாளரும் நாகராஜன்  செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர்,  தமிழகத்தில் கூலிப்படையினர் அதிகரித்து வருகின்றனர் . கோ பேக் மோடி என்கின்ற செய்வதும் கூலிப்படை தான்.  மோடி குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா செல்வதற்காக வரவில்லை,  36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க தமிழகம் வருகிறார். சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது . ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் உள்ள அறையை பூட்டி சாவி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  ஒரு லட்சம் பலன்கள் மோடியின் வருகைக்காக தயார் செய்யப்பட்டு இருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பலூன்களை எதுவுமே செய்ய முடியாது ;அப்படி வைத்திருக்க வேண்டும் என்றார்.