முலாயம் சிங் யாதவ் மறைவு - தலைவர்கள் இரங்கல்!!

 
tn

உத்தரபிரதேசம் முன்னாள் முதலமைச்சரும் , சமாஜ்வாதி கட்சி நிறுவனமான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 82 . உடல் நலக்குறைவால் கடந்த வாரம் முதல் குருகுராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ttn

உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பேற்று ஆட்சி புரிந்து வந்த முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வந்தார்.  மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த இவர் 10 முறை எம்எல்ஏவாகவும்,  ஏழு முறை எம்பியாகவும் வெற்றி பெற்றவர்.  முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 


 உ.பி.யின் முன்னாள் முதல்வர் திரு.முலாயம் சிங் யாதவ் மாநிலத்திற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவை நினைவில் இருக்கும் என்றென்றும். முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அவரது  குடும்பத்திற்கும், தொண்டர்களும் ஆழ்ந்த இரங்கல் 

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் 

tn

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், உத்தரப்பிரதேச மாநில  முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். பல்வேறு பொறுப்புகளில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்கும். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் 

gk

உத்தரப் பிரதேச மாநில முன்னால் முதல்வரும் , சமாஜ்வாதி கட்சி தலைவரும் , இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலாமனது மிகவும் வருத்தத்துக்குரியது . 
உத்தரப் பிரதேச மாநில வளர்ச்சிக்காக மாநில முதலமைச்சராக ஆற்றிய பணிகள் தான் இன்றும் அம்மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது .  உ.பி யில் 3 முறை முதலமைச்சராகவும் , 10 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் , 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் , மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும் , நாடு முழுவதற்குமான மக்கள் பணிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தன்னை முழுமையாக , ஈடுபடுத்திக்கொண்டவர் . 

மக்கள் பணிக்காக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் பொது வாழ்வில் சிறந்து விளங்கியவர் . உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய சக்தியாக வலம் வந்தவர் . 
இந்திய அளவில் புகழ்பெற்ற முதலமைச்சராக செயல்பட்டவர் . அந்த வகையில் உத்தரப் பிரதேச அரசியல் வரலாற்றில் இவருக்கென்று ஓர் தனி இடம் எப்போதும் உண்டு . அவரது இழப்பு குடும்பத்தினருக்கும் , கட்சியினருக்கும் பேரிழப்பாகும் . முலாயம் சிங் யாதவ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கும் , கட்சியினருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் .