#BREAKING ஹெராயின் வழக்கில் தமிழகத்தில் என்ஐஏ சோதனை!!

 
NIA NIA

ஹெராயின் வழக்கில் தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

nia

கேரளாவில் 300 கிலோ ஹெராயின் ஏகே 47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 9  இடங்களிலும் , திருச்சியில் 11 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  திருச்சி மத்திய சிறையில் நடந்து வரும் தேசிய புலனாய்வு முகமை சோதனையின் தொடர்ச்சியாக சென்னையில் இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  சென்னை மண்ணடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  அத்துடன் சென்னை மண்ணடி பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

drug heroin

முன்னதாக இன்று காலை முதல் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக என்ஐஏ எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுடன் சோதனை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள்  கடத்தல் குறித்து டெல்லி என அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.