தேசிய விவசாயிகள் தினம் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

 
farmers

தேசிய விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்தியாவில் இந்த தினத்தை இந்தியில் கிசான் திவாஸ் என்று கூறுகிறார்கள்.  விவசாயிகளின் தேசிய பங்களிப்பை போற்றும் விதமாக விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  குறிப்பாக முன்னாள் மறைந்த இந்திய பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான இன்று ஒவ்வொரு வருடமும் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  

agri

இவர் விவசாய குடும்பத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.  நிலசுவான்தாரர்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடும் கண்டனங்களையும் ,  விமர்சனங்களையும் முன் வைத்தவர் சரண்சிங்.  இவர் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தியவர்.  விவசாயிகளுக்கு இவர் செய்த நலத்திட்டங்கள் காரணமாக இவரது பிறந்த நாள் தேசிய விவசாய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது. சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடைவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.