“நயனுடன் ஜூன் 9ம் தேதி திருமணம்” - விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
nayan-and-vignesh-02

நயன்தாராவை ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்வதை இயக்குநர்  விக்னேஷ் சிவன்  உறுதிப்படுத்தியுள்ளார். 
 

nayan

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.  கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் மூலம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை நயன்தாரா தயாரித்திருந்தார்.  இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் -  நயன்தாரா ஜோடியின் திருமணம் குறித்த தகவல் கசிந்தது. நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.   இதை தொடர்ந்து மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

nayan vick

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன்,  9ம் தேதி நயன்தாராவை திருமணம் செய்கிறேன். திருப்பதியில் திருமணம் செய்ய நினைத்திருந்த நிலையில்,  பயண தூரம் காரணமாக அங்கு திருமணத்தை நடத்த முடியவில்லை.  எனவே மகாபலிபுரத்தில் திருமணம் நடக்கிறது. தற்போது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை.  வருகிற 11ஆம் தேதி நானும் நயன்தாராவும் உங்களை சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி, திருமண அழைப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது