கோப்புகளில் கையெழுத்திட்டார் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
tn

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

tn

இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் , தன் மீதான விமர்சனங்களுக்கு தனது செயல் மூலம் பதிலடி கொடுப்பேன் என்று தெரிவித்ததுடன் , தான் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

tn

 அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின்  மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் . தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின் . தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்க வந்த அமைச்சர் உதயநிதியை இருக்கையில் அமர வைத்தார் அமைச்சர் துரைமுருகன். மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

tn

இதை தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து அலுவலக பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் பெரியார் திடல் , பேராசிரியர் இல்லம் , கோபாலபுரம்,  சிஐடி காலனி ஆகிய இடங்களுக்கு அமைச்சர் உதயநிதி செல்வது குறிப்பிடத்தக்கது