டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் புதிய சாதனை.. குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு 11.61 லட்சம் விண்ணப்பம்..

 
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன்

இதுவரை இல்லாத அளவிற்கு குரூப்2, குரூப் 2ஏ பதவிகளுக்கு 11.61 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக  டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான  ஊழியர்கள் மற்றும்  அலுவலர்கள்தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.   அந்தவகையில் இந்த ஆண்டு  குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்களுக்கு தேர்வு  நடைபெற உள்ளது.  
இதற்கான விண்ணப்பப்பதிவு   பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கியது.

மன உளைச்சலில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்… விரைந்து கலந்தாய்வு நடத்த ராமதாஸ் கோரிக்கை!

நேற்று முன்தினம்  ( மார்ச் 23-ம் தேதி ) விண்ணப்பிக்கக  கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என அனைவரும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். கடைசி நாளான 32ம் தேதியன்று  ஏராளமானோர் விண்ணப்பிக்க  முயற்சித்ததால், பலருக்கும் ஒன் டைன்ம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியாமல் போனதாக புகார் எழுந்தது.  இருப்பினும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின்  எண்ணிக்கை புதிய சாதனையை படைத்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்கள் சந்திபில்  கூறியதாவது, “டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 1 மாத  காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும்,  நேற்று முன்தினம் (மார்ச் 23) இரவு 12 மணி வரை மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  11,786 பேரின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மன உளைச்சலில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்… விரைந்து கலந்தாய்வு நடத்த ராமதாஸ் கோரிக்கை!

 இதுவரை அதிகபட்சமாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுகளில் சுமார் 25 லட்சம் வரை விண்ணப்பித்தது மட்டுமே  சாதனையாக இருந்து வருகிறது.  வழக்கமாக 6.50 ல்;அட்சம் பேர் வரி மட்டுமே விண்ணப்பிக்கும் குரூப் 2 தேர்வுகளில்  இந்த முறை 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும்,  இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் புதிய சாதனை என்றும் குறிப்பிட்டார்.  நடப்பாண்டுக்கான  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது.தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.