வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் தொடக்கம்

 
sims

 சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய செயல் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இந்த திட்டத்தின் மூலமாக நோயாளிகள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வகையில்,  முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளோடு மெய்னிகர் முறையில் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவது, வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கவும், தீவிர நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய குழுவால் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

ma subramanian

இத்திட்டத்தை துவக்கி வைத்த பின் மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  மருத்துவ துறையில் பல திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது. தற்போது தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்ட சிறப்பாக செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நேற்று வரையும் 57 லட்சத்து 1 ஆயிரம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் .தமிழகத்தைத் தவிர வேறு எந்த ஒரு மாநிலத்திலும் நாட்டிலும் வீட்டிற்கு சென்று மருத்துவம் வழங்கும் திட்டத்தை தொடங்கவில்லை என்றார்.

ma subramanian


விபத்துகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 2 மாதத்தில் 38,117 பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு 33.53 கோடி ரூபாய் அரசு செலவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்துகளின் இறப்புகளின் சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கும் நபர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையும் அரசு வழங்கி வருகிறது.