மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் தேவை - இலங்கை அதிபருக்கு நித்தியானந்தா கடிதம்!

 
Nithyananda

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

பிரபல சாமியாரான நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக தீவிரமாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பினார். இதனை தொடர்ந்து அவர் தனக்கென்று ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரித்து அங்கு வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் எங்கு இருக்கின்றார் என்ற தகவல் யாருக்கு தெரியவில்லை. இதனிடையே நித்தியானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. 

ranil

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் வழங்குமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில், இலங்கை தரப்பில் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. நித்தியானந்தா தரப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில்,  நித்தியானந்தா உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவருக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ஆனால், கைலாசா தீவில் போதுமான வசதிகள் இல்லை ஆதலால், மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். நித்தியானந்தா உடலுக்கு என்ன நேர்ந்தது என்பதை கைலாசாவில் உள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆதலால் நித்தியானந்தாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அரசியல் புகலிடம் தர வேண்டும். விமான ஆம்புலன்ஸ் மூலம் நித்தியானந்தாவை இலங்கைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவ வேண்டும். சில சக்திகளால் நித்தியானந்தாவின் உயருக்கு ஆபத்து இருக்கிறது. ஆதலால், அவரின் பாதுகாப்பை உறுதி செய்து, கைலாசாவில் இருந்து பாதுகாப்புடன் செல்வதே சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நித்யானந்தாவின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைாயன அனைத்து செலவையும் கைலாசா அரசு ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.