இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ! - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.40,688 -க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இரக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை அதிகரித்தது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,006-க்கு விற்பனையானது.  ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.70க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதேபோல் சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,688 க்கு விற்பனை செய்யப்பட்டது.   கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,086 விற்கப்படுகிறது.  

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.40,688 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,086-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளியின் விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.