பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்க யுஜிசி விதிகளில் இடமில்லை - தமிழக அளுநர்

 
rn ravi

முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடமில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது வரை 13 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது வரை பல்கலைக்கழகங்களில் வேந்தராக இருக்கும் தமிழக கவர்னருக்கு இருந்து வருகிறது.  துணைவேந்தரை தேர்வு செய்ய தேவைப்படும் போது பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமனம் செய்யப்படுவர். இந்நிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும், புதிதாக 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையஈல் நிறைவேற்றப்பட்டது.  இதேபோல் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவிலும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ஆளுநருக்கு பதில், பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.