தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!!

 
rain

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,  தமிழகத்திற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும்,  புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்  அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஓராண்டில் நமக்கு கிடைக்கும் மழையில் சுமார் 48% வடகிழக்கு பருவமழையே நமக்கு தருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்  கடலோரப் பகுதிகளுக்கு 60 சதவீதமும்,  மற்ற பகுதிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை மழை கிடைக்கும். சமீபத்தில் வங்க கடலில் உருவான சித்திரங்  புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

rain

 இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் , புதுவையிலும்  தொடங்கியுள்ளது.  முன்னதாக   அக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்  இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.