24 மணி நேரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை : தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலெர்ட்..

 
தமிழகத்திற்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’…!

அடுத்த  24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு இந்திய தீபகற்ப பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி,  காரைக்கால், ஆந்திரா, கேரளா,  ஒடிசாவில் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வழகிழக்கு பருவமழை நவம்பர் 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1 , 2, 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா,  வட தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை :  தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலெர்ட்..

இந்த தேதிகளில் நெல்லூர் முதல் கடலூர் வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.  முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,  இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனம்ழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.