இனி தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி..

 
ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

 ஆசிரியர் தேர்வு வாரியம்  நடத்தக் கூடிய பல்வேறு தேர்வுகளில், பிறமாநிலத்தவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில், தமிழ் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்டுள்ளது.  24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான  தேர்வு கணினி வழியாக நடத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான விரிவான விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,  இந்நிலையில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் மொழி தகுதி தாள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

teachers exam

பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையங்களைத் தொடர்ந்து தற்போது ஆசிரியர் தேர்வு வாரியமும், கட்டாய  தமிழ் தகுதித் தேர்வை  அமல்படுத்தியுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர்  இந்த  தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு

 50 மதிப்பெண்ணுக்கு ( 30 கேள்விகள்)  கேட்கப்படும் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வில்  20 மதிப்பெண்கள் ( 40%) மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவேண்டும். அப்படி  தேர்ச்சி பெற்றால் மட்டுமே 'பகுதி ஆ' பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது  விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்  தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.