#BREAKING ஈபிஎஸ்-க்கு எதிராக புகார் - தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓபிஎஸ்

 
ops

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ops

ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.  அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.,  மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சென்றுள்ளனர்.குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. 

ops

டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் மற்றும் அதிமுக கட்சியின் நிலவரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதேசமயம் ஒற்றைத் தலைமை  குறித்து டெல்லி தலைவர்களுடன் கலந்து ஆலோசிப்பீர்களா? என்ற கேள்விக்கு ஓபிஎஸ்  பதில் ஏதும் சொல்லாமல்  சென்றார். முன்னதாக அதிமுக பொது குழு நேற்று  கூட்டப்பட்ட நிலையில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ops eps

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார் . கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றைத் தலைமையை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார் . ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூட்டியதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஒ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். தன்னுடைய கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது என அறிவிக்க வலியுறுத்தி முறையிட்டுள்ளார்.