’’உன்னை மாதிரி சித்தி காலுல விழுந்தேனா?’’, ‘’பெரியப்பன் பேச்ச கேட்டுக்கிட்டு ஆடுற?’’: ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்! வைரலாகும் வீடியோ!

 
fi

ஓபிஎஸ் -இபிஎஸ் இருவருக்கும் இடையேயான மோதலை மையமாக வைத்து ஒரு வீடியோ சித்தரிக்கப்பட்டிருக்கிறது.   இரண்டு சிறுவர்களை வைத்து அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது.   ஓபிஎஸ் , இபிஎஸ் இரண்டு பேருக்கும் நடக்கும் பஞ்சாயத்து குறித்து அந்த  சிறுவர்களை  சித்தரித்திருக்கிறார்கள்.  இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

fg

 அதிமுகவில் ஜெயலலிதாவால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம்.  ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முதல்வராக்கியதால் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.   இதன் பின்னர் கட்சியின் சின்னம் முடக்கப்பட இருந்தது. அதனால் எடப்பாடி பழனிச்சாமி -ஓ. பன்னீர்செல்வம் இணைந்தார்கள்.   இவர்களின் இணைப்புக்கு பின்னர் சசிகலா கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.  தற்போது ஓ. பன்னீர் செல்வத்தையும் கட்சியிலிருந்து தூக்கி எறிகிறார் எடப்பாடி பழனிச்சாமி .  இது குறித்த சட்டப் போராட்டமும் நடந்து வருகிறது.

 இந்த நிலையில் இந்த நிலவரங்களை இரண்டு சிறுவர்களை வைத்து வீடியோவாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.   அந்த வீடியோவில்,   ’’இந்த வீடு எனக்குத் தான் அப்படி இல்லைன்னா நான் கோர்ட்டுக்கு போகிறேன்’’ என்று அந்த சிறுவன் சொல்ல,   இன்னொரு சிறுவனோ,  ‘’ இரு இரு பெரியப்பன் பேச்சை கேட்டுகிட்டு ஆடுற? ஆடு ஆடு’’ என்று ஆவேசமாகிறார்.  

f

 ’’அண்ணே... இவ்ளத்துக்கும் காரணம் என் பெரியப்பன் தான்.  குந்துனாப்புல கிள்ளிப்புட்டு கூலா உட்கார்ந்து இருக்கான் ’’என்றும் அந்த சிறுவன் ஆத்திரமாகிறான்.

 நடுவில் நிற்கும் சிறுவனோ,   ’’தம்பி இந்த வீடு உங்க வீடு.   இதுல பெரியப்பாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை.  இரண்டு பேரும் பேசி ஒத்து போறதா இருந்தா போங்க.   இல்லையென்றால் உங்க விருப்பம் ஏதாச்சும் பண்ணிட்டு போங்க’’ என்று சொல்கிறான்.    உடனே அந்த சிறுவன்,    ’’அண்ணே நீங்க வேற..  எங்க பெரியப்பன் வாசலுக்கு வந்தாலே இவன்  கொல்லைப் பக்கத்தில் இருந்து கும்பிட்டுக்கிட்டே வருவான்’’ என்கிறான்.

’’ ஏன் நீ கும்பிட்டது இல்லையா’’என்று சிறுவன் கேட்க ,   ‘’நான் பெரியப்பன் வந்தா நேர்ல நின்னு கும்பிட்டு இருக்கேன்.   ஆனா உன்னை மாதிரியா சித்தி காலில் விழுந்தேன்’’ என்று கலாய்க்க,    ’’பார்த்தீங்களா... இந்த மாதிரி எல்லாம் இவன் பேசிக்கொண்டு இருக்கிறதுனால தான் இந்த வீடு அவனுக்கு இல்ல எனக்குத் தான் சொந்தம் என சொல்கிறேன்’’ என்று அந்த சிறுவன் ஆத்திரமடைகிறான்.

oe

 உடனே இன்னொரு சிறுவன்,  ’’ அண்ணே உங்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லுறேன்.  அம்மா எப்போதெல்லாம் வெளியே போகுதோ அப்ப எல்லாம் இந்த வீட்டை பூட்டி பார்த்துக்க சொல்லி என்கிட்டே தான் சாவியை கொடுத்திருக்கு .  அப்படி மூன்று முறை என்னிடம் தான் சாவியை கொடுத்திட்டு போயிருக்குது அம்மா.  நான் நம்பிக்கையானவன் அண்ணே’’ என்கிறான்.   உடனே இன்னொரு சிறுவன்,  ‘’ எங்க அம்மா செத்ததுக்கு பிறகு நாலு வருஷம் இந்த வீட்டை நான் தான் பார்த்து வந்தேன்.   அப்போது எல்லாம் பார்த்துக்க தெரிஞ்ச எனக்கு இப்போது இந்த வீட்டை பார்த்துக்க தெரியாதா?’’ என்று கேட்கிறான்.  

ff

இன்னொரு சிறுவன்,   ’’சும்மா நிறுத்துடா நாலு வருஷமா இந்த வீட்டை பார்த்துக்க சொன்ன சித்தியையே நாலே நாலுல  துரத்தி விட்டவன் தானடா நீ’’ என்று சொல்ல, ’’ சும்மா நிறுத்துடா நானும் சித்தியும் சேர்ந்து இந்த வீட்டை பாதுகாக்கிறத பத்தி பேசிகிட்டு இருக்கும்போது நீ அம்மா சமாதியில் உட்கார்ந்து இந்த வீட்டை கலைச்சி விட பார்த்து வந்தான்டா நீ’’என்று எகிற,    இதற்கு நடுவில் உள்ளவர்,  ‘’ இப்படி பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா இந்த வீட்டை வித்துப் புட்டு நடு வீதிக்கு வர வேண்டியது தான்’’ என்று எச்சரிக்கிறார் .

இரண்டு பேரும் கலந்து பேசி ஒரு முடிவை எடுத்துச் சொல்லுங்கள் என்று சொல்கிறார்.   உடனே அந்த சிறுவன்,  ‘’ அண்ணே எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப இவன் கிட்ட ஆயிரம் ரூபா கொடுத்தேன்.  அந்த பணம் எங்கடா என்று கேட்டா அம்மா இட்லி தின்னுச்சு,  இடியாப்பம் தின்னுச்சுன்னு பொய் கணக்கு சொல்கிறான் என்று சொல்ல ,  அண்ணே நம்ம வீட்டு பஞ்சாயத்தை பேச நான் உங்களைத் தானே வர சொன்னேன்.   இவன் யாரை கேட்டு உங்க கிட்ட பேசாம 23ஆம் தேதி ஊர கூட்டுனான்?’’என்று கேட்க,   அதற்கு அந்த சிறுவன்,   ’’இந்த பையன் பஞ்சாயத்தை கூட்டினேன்னு  சாதாரணமா சொல்லுறானே.   அந்த பஞ்சாயத்தை கூட்ட  பட்டப்பாடு எனக்கு தான் தெரியும் .    எவ்வளவு செலவு பண்ணி பஞ்சாயத்தை கூட்டி மரியாதையா இவனையும் கூப்பிட்டேன் வந்தேன்.  அஞ்சே நிமிஷத்துல அப்படியே கலைச்சு விட்டுட்டு போயிட்டான் என்னை அசிங்கப்படுத்துவதற்காகத்தான் கூப்பிட்டிருக்காண்ணே.  அங்கே என்னை ஒரு பயலும் மதிக்கல என்று சொல்ல, ‘’ இப்ப 11ஆம் தேதியும் நான் பஞ்சாயத்தை கூட்டியிருக்குறேன்.  அங்கேயும் வந்து இவன் ஏட்டிக்கு போட்டிக்கு ஏதாவது பண்ணுனா....?என்று எச்சரிக்கிறான்.