பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர் - கோவை செல்வராஜ்

 
kovai selvaraj

எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய பொன்னையன்  மற்றும் ஜெயக்குமார் அதிருப்தியில் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டதோடு, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது மகன்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 42 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலுக்கு அறிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கக்கூடிய பொன்னையன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதால் அங்கு மாற்றங்கள் வர இருக்கிறது.  புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துதான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.  
ஓ.பன்னீர்செல்வம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.  அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை சேர்த்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.