"சின்னம்மாவும், டிடிவி தினகரனும் கட்சியில் இணைய வேண்டும்" - ஓபிஎஸ் பகிரங்க பேட்டி!!

 
ops sasikala

சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதே விருப்பம் என அழைப்பு விடுத்துள்ளார். 

ops sasikala

இந்நிலையில் சசிகலா - தினகரன் இணைப்பு குறித்து ஓபிஎஸ்-யிடம் யாராக இருந்தாலும் கட்சிக்குள் இணைத்து கொள்வீர்களா..?? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,   நானும், எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கட்சி பணியாற்றினோம், கூட்டுத்தலைமை தான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது. அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது; அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. 

ops

கட்சிக்காக உழைத்தவர்கள் அனைவரும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.  யார் வேண்டுமானாலும் இணையலாம் என்பது சின்னம்மா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோரையும் சேர்த்து தான் கூறுகிறோம். நாங்கள் அங்கு இணையலாம், அவர்கள் இங்கு இணையலாம் என்பது அல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு .எம்.ஜி.ஆர். ஜெயலலிதா குடையின் கீழ் அனைவரும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.